சென்னையில் மழையின் காரணமாக விமான சேவை பாதிப்பு

சென்னையில் நேற்று விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரக்கூடிய அடுத்த ஏழு நாட்களுக்கு மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு எட்டு மணிக்கு மேல் பல்வேறு இடங்களில் கன […]

சென்னையில் நேற்று விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக விமான சேவை கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரக்கூடிய அடுத்த ஏழு நாட்களுக்கு மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் இரவு எட்டு மணிக்கு மேல் பல்வேறு இடங்களில் கன மழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் விடாது மழை பெய்ததால் சென்னையில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 15 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தது. மேலும் சென்னைக்கு வர வேண்டிய நான்கு விமானங்கள் பெங்களூருக்கு திரும்பி சென்றன. அதேபோன்று சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 16 விமானங்கள் பல மணி நேரமாக வானிலை காரணமாக தாமதிக்கப்பட்டு வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu