சென்னையில் பெய்து வரும் மழையால் எட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 15 விமானங்கள் காலதாமதமாக இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல
கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் வங்க கடலில் நிலை கொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை நீக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் எட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னையில் இருந்து அந்தமான், டெல்லி, மும்பை செல்லும் விமானங்கள் உட்பட்ட 15 விமானங்கள் காலதாமதமாக இயக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.