பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருச்சி செல்லும் விமானங்கள் நிரம்பின.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். ரெயில், பஸ்களில் முன்பதிவு முடிந்து விட்டதால் பலர் விமான பயணத்தை நாடுகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருச்சி, கோவை செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதிக கட்டணம் கொடுக்க முன் வந்தாலும் விமானங்களில் டிக்கெட்டுகள் நிரம்பி விட்டதால் சீட் இ்ல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சொந்த ஊர் செல்ல பயணிகள் பெரும் ஏமாற்றமும், கவலையும் அடைந்தனர்.