புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனம் தொடங்கிய பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சால்

November 8, 2023

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை தோற்றுனரான பின்னி பன்சால், புதிதாக செயற்கை நுண்ணறிவு புத்தாக்க நிறுவனம் ஒன்றை தொடங்குகிறார்.பின்னி பன்சால் தொடங்கும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம், பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட உள்ளது. இதற்காக செயற்கை நுண்ணறிவு துறையில் நிபுணத்துவம் வாய்ந்த 15 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும், கூடுதலான செயற்கை நுண்ணறிவு திறன் வாய்ந்த பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவை நிறுவனமாக இயங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற […]

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை தோற்றுனரான பின்னி பன்சால், புதிதாக செயற்கை நுண்ணறிவு புத்தாக்க நிறுவனம் ஒன்றை தொடங்குகிறார்.பின்னி பன்சால் தொடங்கும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம், பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட உள்ளது. இதற்காக செயற்கை நுண்ணறிவு துறையில் நிபுணத்துவம் வாய்ந்த 15 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும், கூடுதலான செயற்கை நுண்ணறிவு திறன் வாய்ந்த பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, செயற்கை நுண்ணறிவு சார்ந்த சேவை நிறுவனமாக இயங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு பணியாளர்கள் இங்கிருந்து பணியாற்ற அனுப்பப்பட உள்ளனர். வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பிரிவில், இந்த நிறுவனம் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என பின்னி பன்சால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu