பிரபல இணைய வர்த்தகத் தளமான பிளிப்கார்ட் தளத்தின் விற்பனை, இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வால்மார்ட் நிறுவனத்தின் துணைவேந்தர் மற்றும் தலைமை நிதி அதிகாரியான டேவிட் ரைனி, பிளிப்கார்ட் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்தியாவில் பிளிப்கார்ட் நல்ல முன்னேற்றத்தை எட்டி உள்ளதாக கூறியுள்ளார்.
பிளிப்கார்ட் மட்டுமின்றி, வால்மார்ட் குடும்பத்தை சேர்ந்த போன் பே நிறுவனத்தின் வளர்ச்சியும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ளிப்கார்ட் மற்றும் போன் பே நிறுவனங்கள் இரண்டும், பரஸ்பர முறையில் இந்தியாவில் முன்னேற்றம் அடைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.