தமிழகத்தில் மிச்சாங் புயலால் பாதிப்படைந்த 24 லட்சத்து 25 ஆயிரத்து 336 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கபட்டு உள்ளது.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளுவர் ஆகிய நான்கு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்படைந்த ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரூபாய் 6000 வெள்ள நிவாரணத் தொகையாக தமிழக அரசு அறிவித்தது. இதனை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் விசாரணையில் தமிழக அரசு சார்பில் மேற்கூறிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 24,25,336 குடும்பங்களுக்கு தலா 6000 ரூபாய் வீதம் 1455 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரணம் ஜனவரி மாதம் வழங்கப்பட்டுவிட்டது. மேலும் நிவாரண உதவி தேவை என பெறப்பட்ட 5 லட்சத்து 28,933 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அதில் 53 ஆயிரம் குடும்பங்களுக்கு 31 கோடியே 23 லட்சம் ரூபாய் என விடுபட்ட குடும்பங்களுக்கான நிவாரணத்தொகை மொத்தம் 1487 கூடிய ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழுமையான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.