சென்னையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் தேங்கியது. இதனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதில் கடந்த வாரத்தில் மழை பெய்த போது 37 இடங்களில் மழைநீர் தேங்கியது. ஆனால் தற்போது 192 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வீடு தெருக்கள் ஆகிய இடங்களில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். விடிய விடிய மீட்பு பணி நடைபெற்றது இதில் 50 இடங்களில் மழை நீர் வெளியேற்றப்பட்டது. மீதமுள்ள இடங்களில் வெள்ளத்தை வெளியேற்ற மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.














