சீனாவில் வெள்ளப்பெருக்கு - 27000 பேர் வெளியேற்றம்

June 15, 2024

சீனாவில் வெள்ளப் பெருக்கு காரணமாக 27 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். சீனாவில் உள்ள புஜியான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள 386 நகரங்களில் சுமார் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. இதனால் சான்மின், நான்பின் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதில் 3000 ஹெக்டர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக 27 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பல […]

சீனாவில் வெள்ளப் பெருக்கு காரணமாக 27 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

சீனாவில் உள்ள புஜியான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள 386 நகரங்களில் சுமார் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. இதனால் சான்மின், நான்பின் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதில் 3000 ஹெக்டர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக 27 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதியுற்றனர். அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu