தமிழகத்தில் குழந்தைகளை பாதிக்கும் ஃப்ளூ காய்ச்சல்

September 14, 2022

தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மழை , வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு வைரஸ் காய்ச்சலுடன் சளி, இருமல் பாதிப்பும் கண்டறியப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மருத்துவமனைகளில் ப்ளூ காய்ச்சல் சிகிச்சைக்காக வரக்கூடிய பொது மக்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சல் வார்டில் ஏராளமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாள் […]

தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கு ப்ளூ காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மழை , வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு வைரஸ் காய்ச்சலுடன் சளி, இருமல் பாதிப்பும் கண்டறியப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மருத்துவமனைகளில் ப்ளூ காய்ச்சல் சிகிச்சைக்காக வரக்கூடிய பொது மக்களின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சல் வார்டில் ஏராளமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாள் மட்டும் 100க்கு மேற்பட்ட குழந்தைகள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது போன்று கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட பல்வேறு இடங்களிலும் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்படக்கூடிய குழந்தை எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது.

இந்த காய்ச்சல் பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கிறது. ஜலதோஷம், மிக அதிக காய்ச்சல், விடாமல் ஏற்படும் இருமல் ஆகியவை இதன் அறிகுறியாகும். இந்த காய்ச்சல் சுவாச மண்டலத்தை அதிகம் பாதிக்கும். குழந்தைகளுக்கு இதற்கான தடுப்பூசி கட்டயாம் செலுத்த வேண்டும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu