நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பாராளுமன்ற தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்றது. இதன் அடுத்த கட்ட தேர்தல் 13ஆம் தேதி நாட்டின் 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தமிழக மற்றும் கேரள பகுதிகளில் தீவிரமாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கேரளாவில் ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு கேரளா மாநில எல்லைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.