பொதுத்துறை வங்கிகளின் லாபம் 25685 கோடி! - நிர்மலா சீதாராமன்

November 8, 2022

இந்தியாவில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளின் ஒருங்கிணைந்த லாபம், கடந்த காலாண்டில் 25685 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. இது குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அரசாங்கம் எடுத்த குறிப்பிட்ட சில நடவடிக்கைகளால், இந்த லாபம் பதிவாகியுள்ளதாக பெருமையுடன் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த வருட லாபத்துடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில், 50% வளர்ச்சியை பொதுத்துறை வங்கிகள் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு நிதி ஆண்டில் இதுவரை, பொதுத்துறை […]

இந்தியாவில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளின் ஒருங்கிணைந்த லாபம், கடந்த காலாண்டில் 25685 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது.

இது குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அரசாங்கம் எடுத்த குறிப்பிட்ட சில நடவடிக்கைகளால், இந்த லாபம் பதிவாகியுள்ளதாக பெருமையுடன் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த வருட லாபத்துடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில், 50% வளர்ச்சியை பொதுத்துறை வங்கிகள் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு நிதி ஆண்டில் இதுவரை, பொதுத்துறை வங்கிகள் 40991 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 31.6% வளர்ச்சி என்றும் பதிவிட்டுள்ளார். பொதுத்துறை வங்கிகளில் முக்கியமாக, பாரத ஸ்டேட் வங்கி 74% லாப வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த வங்கியின் தனிப்பட்ட காலாண்டு லாபம் 13265 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu