சென்னையில் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் வாகன ஓட்டிகள் கவனமாக இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடி, இன்று காலை சென்னையில் மேகமூட்டம் மற்றும் லேசான பனிமூட்டம் நிலவியது. இதனால், சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெளிவாக தெரியவில்லை. மேலும் சென்னையில் பனிமூட்டம் காரணமாக ரெயில் மற்றும் விமான சேவைகள் தாமதமாக இயக்கப்பட்டு, காலை 8.30 மணிக்குப் பிறகு விமான சேவைகள் சரிவர செயல்படும் என விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.