டெல்லியில் அதிகளவு பனிமூட்டம் காணப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.
டெல்லி, உத்திரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பனி கடந்த சில நாட்களாக நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேலும் இன்று அதிகாலை டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. இதனால் டெல்லியின் நகரில் யார் எதிரில் வருகிறார்கள் என்பது கூட தெரியாத அளவு பனி அடர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக டெல்லியில் ரயில் மற்றும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 108 விமானங்கள் தாமதமாக தரை இறங்கியது