மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய உணவு நிறுவனங்கள் திட்டம்

ஸ்விகி, சோமொட்டோ மற்றும் பிக் பாஸ்கெட் போன்ற உணவு நிறுவனங்கள் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய திட்டமிட்டு வருகின்றன. உலக அளவில் பொதுமக்கள் இடையே ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி என்பது தற்போது மிகப்பெரிய அங்கமாக உருமாறி வருகிறது. இதன் மூலம் பல்வேறு நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் உணவு கட்டணம் போக தங்களின் சேவைக்கான கட்டணத்தையும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றன. மேலும் உணவு டெலிவரி நிறுவனங்கள் அதிகப்படியான […]

ஸ்விகி, சோமொட்டோ மற்றும் பிக் பாஸ்கெட் போன்ற உணவு நிறுவனங்கள் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய திட்டமிட்டு வருகின்றன.

உலக அளவில் பொதுமக்கள் இடையே ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி என்பது தற்போது மிகப்பெரிய அங்கமாக உருமாறி வருகிறது. இதன் மூலம் பல்வேறு நிறுவனங்கள் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் உணவு கட்டணம் போக தங்களின் சேவைக்கான கட்டணத்தையும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றன. மேலும் உணவு டெலிவரி நிறுவனங்கள் அதிகப்படியான லாபத்தையும் வருமானத்தையும் ஈட்ட வேண்டும் என்ற இலக்கை வைத்து பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது இந்தியாவில் இந்த நிறுவனங்கள் பீர்,ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் குறைவாக சேர்க்கப்பட்ட மதுபான வகைகளை ஆன்லைன் மூலம் டோர் டெலிவரி செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் மதுபானங்கள் ஹோம் டெலிவரி செய்யும் அனுமதி உள்ள நிலையில், கர்நாடகா, அரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உணவு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu