கனடாவில் 25 சதவீத பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக தங்களின் உணவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
கனடா பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகிறது. அங்கு பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பு குறைபாடுகள் பொதுவான பிரச்சினைகளாக அமைந்துள்ளன. மளிகை பொருட்களின் விலைகள் மிகுந்த உயர்வை சந்தித்து, நடுத்தர வருவாயுள்ள குடும்பங்கள் கடுமையாக கஷ்டப்படுகின்றன. உணவு வங்கிகளிலும் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில், சர்வதேச தொண்டு நிறுவனம் ஆன சால்வேஷன் ஆர்மி ஒரு ஆய்வை மேற்கொண்டு நேற்று அறிக்கை வெளியிட்டது. அதில், 25 சதவீத கனடிய பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்காக தங்களின் உணவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இதேசமயம், 90 சதவீதமானோர் மற்ற தேவைகளுக்காக மளிகைப் பொருட்களுக்கான செலவைக் குறைத்துள்ளனர்.