பெங்களூர் உணவகங்களில் உணவு விலை உயரும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
பெங்களூரில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை காரணம் காண்பித்து சில மாதங்களுக்கு முன்பு பெரிய, நடுத்தர, சிறிய ஹோட்டல்களில் உணவு, சிற்றுண்டி, பேக்கரி தின்பண்டங்களின் விலையை அதிகரித்தனர். இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மீண்டும் உணவு, சிற்றுண்டி விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக, வரும் 18ஆம் தேதி உணவக உரிமையாளர்கள் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் விலை உயர்வு பற்றி ஆலோசிக்கப்படும். அதன்பின் புதிய விலை அமலுக்கு வரும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.