2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, 82 % கையகப்படுத்தப்பட்டுள்ளது

January 30, 2023

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, 82 சதவீதம் நிலம் இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ரூ.63,246 கோடி செலவில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இப்பணிகளை வரும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 2-ம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 112.72 ஹெக்டேர் நிலம் தேவை. இவற்றில் 82% (93 ஹெக்டேர்) நிலம் இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளான […]

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, 82 சதவீதம் நிலம் இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ரூ.63,246 கோடி செலவில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இப்பணிகளை வரும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 2-ம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 112.72 ஹெக்டேர் நிலம் தேவை. இவற்றில் 82% (93 ஹெக்டேர்) நிலம் இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளான காளியம்மன் கோயில் தெரு, வடபழனி, ஆற்காடு சாலை உள்ளிட்ட சில பகுதிகளில் நிலத்தை கையகப்படுத்த வேண்டும். ஒப்பந்ததாரர்கள் கட்டுமானப் பணிக்காக, திட்ட இடத்தை கையகப்படுத்த விரும்புவதால், விரைவில் நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தனியார் நிலத்தை கையகப்படுத்தாமல் இருக்கத் திட்டமிட்டு பல முயற்சிகளை எடுத்தோம். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே தனியார் நிலத்தைப் பயன்படுத்துகிறோம் என்று அவர்கள் கூறினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu