வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஆண்களை விட பெண் உறுப்பினர்கள் அதிகம் 

October 27, 2022

வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஆண்களை விட பெண் உறுப்பினர்கள் அதிகமாக உள்ளனர். அயர்லாந்திற்கான தூதராகப் பதவியேற்ற முன்னாள் சபாநாயகர் ட்ரெவர் மல்லார்டுக்குப் பதிலாக, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சோரயா பெக்-மேசன் நாடாளுமன்றத்தில் பதவியேற்றார். இச்சம்பவமானது நியூசிலாந்து பாராளுமன்றத்தில் 60 பெண்கள் மற்றும் 59 ஆண்கள் எனும் சமநிலையை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்தின் வரலாற்றில் முதல்முறையாக, ஆண் உறுப்பினர்களை விட பெண் உறுப்பினர் அதிகமாக உள்ளனர். ஏற்கனவே நியூசிலாந்து வலுவான பெண் பிரதிநிதித்துவத்தின் வரலாற்றைக் கொண்டுள்ளது. அதற்குச் சான்றாக […]

வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஆண்களை விட பெண் உறுப்பினர்கள் அதிகமாக உள்ளனர்.

அயர்லாந்திற்கான தூதராகப் பதவியேற்ற முன்னாள் சபாநாயகர் ட்ரெவர் மல்லார்டுக்குப் பதிலாக, தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சோரயா பெக்-மேசன் நாடாளுமன்றத்தில் பதவியேற்றார். இச்சம்பவமானது நியூசிலாந்து பாராளுமன்றத்தில் 60 பெண்கள் மற்றும் 59 ஆண்கள் எனும் சமநிலையை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தின் வரலாற்றில் முதல்முறையாக, ஆண் உறுப்பினர்களை விட பெண் உறுப்பினர் அதிகமாக உள்ளனர். ஏற்கனவே நியூசிலாந்து வலுவான பெண் பிரதிநிதித்துவத்தின் வரலாற்றைக் கொண்டுள்ளது. அதற்குச் சான்றாக 1893 ஆம் ஆண்டில், பெண்களை வாக்களிக்க அனுமதித்த முதல் நாடு நியூசிலாந்து ஆகும். அதுமட்டுமின்றி நியூசிலாந்தின் தற்போதைய பிரதம மந்திரி ஜசிந்தா ஆர்டெர்ன் நாட்டின் மூன்றாவது பெண் தலைவர் ஆவார். மேலும் நியூசிலாந்தில் பெண்கள் தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் கவர்னர் ஜெனரல் உட்பட பல முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.

அந்த வகையில் கியூபா, மெக்சிகோ, நிகரகுவா, ருவாண்டா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் உட்பட உலகளவில், சுமார் 26% பெண்களே ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில் இந்த ஆண்டு பாராளுமன்றங்களில் குறைந்தபட்சம் 50% பெண் பிரதிநிதித்துவத்தை கோர முடியும் என்று இன்டர்-பாராளுமன்ற ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சிகள், தற்போது தங்கள் போட்டியாளர்களை விட குறைந்த விகிதத்தில் பெண்களைக் கொண்டிருக்கின்றன. ஆதலால் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலில் எண்ணிக்கையை அதிகப்படுத்த தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu