உலகின் சராசரி வெப்பநிலை மீண்டும் புதிய உச்சம்

July 7, 2023

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று, உலகின் சராசரி வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் ஆக புதிய உச்சத்தை தொட்டதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், திங்கட்கிழமையை தொடர்ந்து, இந்த வாரத்தின் அடுத்தடுத்த நாட்களில், உலகத்தின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. ஜூலை 4ம் தேதி 17.18 டிகிரி செல்சியஸ் ஆகவும், ஜூலை 6ஆம் தேதி 17.23 டிகிரி செல்சியஸ் ஆகவும் சராசரி வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரே வாரத்தில் உலகின் சராசரி […]

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று, உலகின் சராசரி வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் ஆக புதிய உச்சத்தை தொட்டதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், திங்கட்கிழமையை தொடர்ந்து, இந்த வாரத்தின் அடுத்தடுத்த நாட்களில், உலகத்தின் சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. ஜூலை 4ம் தேதி 17.18 டிகிரி செல்சியஸ் ஆகவும், ஜூலை 6ஆம் தேதி 17.23 டிகிரி செல்சியஸ் ஆகவும் சராசரி வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரே வாரத்தில் உலகின் சராசரி வெப்பநிலை புதிய உச்சங்களை பதிவு செய்து வருகிறது.

முன்னதாக, 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலகின் வெப்பமான மாதமாக கருதப்பட்டு வந்த நிலையில், நடப்பு ஜூலை மாதம் விஞ்ஞானிகளை மிகவும் அச்சமடைய செய்துள்ளது. ஏற்கனவே இது குறித்து பேசிய பிரிட்டன் சூழலியல் ஆய்வாளர் ஃப்ரெட்ரிக் ஆட்டோ, ‘இது மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மன மரண ஒலி’ என கூறியது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu