ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 100 இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். ஏற்கனவே, நேற்று முன்தினம் வெளியான ஹூருன் நிறுவனத்தின் பணக்காரர்கள் பட்டியலிலும் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள முதல் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 799 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதில், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மட்டுமே 92 பில்லியன் டாலர்கள் ஆகும். அதே சமயத்தில், கடந்த ஆண்டு இந்த பட்டியலில் முதலிடம் பிடித்த கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 82 பில்லியன் டாலர்களில் இருந்து இந்த ஆண்டு 68 பில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது என ஃபோர்ப்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.