உலகப் பணக்கார பெண்மணிகள் - ஃபோர்ப்ஸ் பட்டியல் வெளியீடு

May 31, 2024

உலகப் பணக்கார பெண்மணிகள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த சாவித்ரி ஜிந்தால் இடம் பிடித்துள்ளார். உலகின் தலைசிறந்த 10 பெண் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில், லாரியல் நிறுவனத்தின் வாரிசான பிரான்சுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 98.2 பில்லியன் டாலர்கள் ஆகும். தொடர்ந்து, 4வது வருடமாக அவர் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக, 77.2 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் ஆலிஸ் வால்டன் […]

உலகப் பணக்கார பெண்மணிகள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த சாவித்ரி ஜிந்தால் இடம் பிடித்துள்ளார்.

உலகின் தலைசிறந்த 10 பெண் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில், லாரியல் நிறுவனத்தின் வாரிசான பிரான்சுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 98.2 பில்லியன் டாலர்கள் ஆகும். தொடர்ந்து, 4வது வருடமாக அவர் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக, 77.2 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் ஆலிஸ் வால்டன் 2ம் இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில், 66.3 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் ஜூலியா கோச் உள்ளார். நான்காம் இடத்தில், மார்ஸ் இன்க் நிறுவனத்தின் வாரிசு ஜாக்குலின் மார்ஸ், 39.4 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் உள்ளார். இந்தியாவின் பணக்கார பெண்மணியான சாவித்ரி ஜிந்தால், 38 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, ரஃபேலா அபோன்டே-டயமண்ட், மெக்கென்சி ஸ்காட், ஜினா ரெய்ன்ஹார்ட், அபிகாயில் ஜான்சன், மிரியம் அடெல்சன் ஆகியோர் உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu