ஃபோர்டு நிறுவனத்தின் எஃப் 150 மின்சார ட்ரக் பேட்டரியில் முக்கியமான கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்த ரக வாகனங்களின் உற்பத்தி மற்றும் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தை விநியோகம் செய்வதற்கு முந்தைய கட்டத்தில், வழக்கமாக நடத்தப்படும் தர பரிசோதனையில் இந்த கோளாறு கண்டறியப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது, இந்த கோளாறை சரி செய்யும் நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ஆனால், கோளாறு சரி செய்யப்பட்டு, வாகனம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதே வேளையில், நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கை குறித்த செய்திகள் வெளியாகின. நிறுவனத்தின் ஐரோப்பா பிரிவிலிருந்து சுமார் 3800 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. அதை தொடர்ந்து, ஃபோர்டு நிறுவனத்தின் பங்குகள் 1.5% சரிந்தன.














