அமெரிக்காவில் ஃபோர்டு நிறுவனத்தின் சுமார் 1.5 மில்லியன் வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. பிரேக் மற்றும் விண்ட் ஷீல்டு வைப்பர் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக, வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் திரும்பப் பெறும் நடவடிக்கை, ஃபோர்டு வரலாற்றில் மிகப்பெரியதாக சொல்லப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2013 முதல் 2018 வரை பதிவான, திரும்பப் பெற்ற வாகனங்கள் எண்ணிக்கை 1.3 மில்லியன் அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாகன டீலர்கள் தாங்களாகவே இந்த பிரேக் ஹோசை மாற்றி அமைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் செய்தி அனுப்பவுள்ளது. அவர்களுக்கான பாகங்கள் கிடைத்தவுடன் மறு செய்தி அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், “விண்ட்ஷீல்ட் வைப்பர்கள் கோளாறு வேண்டுமானால் டீலர்களால் சரி செய்யப்படும். வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 27ஆம் தேதி முதல் இது குறித்த செய்தி அனுப்பப்படும்” என்று ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.