டெஸ்லாவுக்கு போட்டியாக ஃபோர்டு முஸ்டாங் மின்சார வாகன விலை குறைப்பு

January 31, 2023

டெஸ்லா நிறுவனத்திற்கு போட்டியாக, ஃபோர்டு நிறுவனம் தனது மின்சார வாகனத்தின் விலையை குறைத்து அறிவித்துள்ளது. சராசரியாக ஒரு வாகனத்திற்கு 4500 டாலர்கள் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெஸ்லா நிறுவனம் தனது வாகனங்களின் விலையில் 20% சலுகையை அறிவித்துள்ள நிலையில், ஃபோர்டு நிறுவனத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஃபோர்டு நிறுவனத்தின் மின்சார வாகனமான முஸ்டாங் மச் ஈ மாடல் லாபம் ஈட்டாத மாடலாக அறியப்படுகிறது. இந்நிலையில், அதன் விற்பனை வரும் மாதங்களில் அதிகரிக்கும் என்று எதிர்நோக்குவதாக கூறும் […]

டெஸ்லா நிறுவனத்திற்கு போட்டியாக, ஃபோர்டு நிறுவனம் தனது மின்சார வாகனத்தின் விலையை குறைத்து அறிவித்துள்ளது. சராசரியாக ஒரு வாகனத்திற்கு 4500 டாலர்கள் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெஸ்லா நிறுவனம் தனது வாகனங்களின் விலையில் 20% சலுகையை அறிவித்துள்ள நிலையில், ஃபோர்டு நிறுவனத்தின் அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்டு நிறுவனத்தின் மின்சார வாகனமான முஸ்டாங் மச் ஈ மாடல் லாபம் ஈட்டாத மாடலாக அறியப்படுகிறது. இந்நிலையில், அதன் விற்பனை வரும் மாதங்களில் அதிகரிக்கும் என்று எதிர்நோக்குவதாக கூறும் ஃபோர்டு நிறுவனம், வாகன உற்பத்தியை 67% உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும், வாகனத்தின் விலையில் 5.3% சலுகையை அறிவித்துள்ளது. சந்தை போட்டியை எதிர்கொள்ளவே இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில், மச் ஈ மாடலின் குறைந்தபட்ச விலை 45995 அமெரிக்க டாலர்களாக உள்ளது. மேலும், மின்சார வாகனத்தின் அதிகப்பட்ச விலை 63995 டாலர்களாக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu