ஃபோர்டு நிறுவனத்தில் 3800 பேர் பணி நீக்கம்

February 16, 2023

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு, தனது ஐரோப்பா பிரிவில் இருந்து 11% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. வாகனத் துறையை பொறுத்தவரை, பாரம்பரிய முறையில் இருந்து மின்சார வாகன முறைக்கு உலகம் மாறி வருவதால் இந்த பணி நீக்கம் அவசியமாகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனம் அறிவித்துள்ள இந்த பணி நீக்கத்தால், ஜெர்மனி மற்றும் பிரிட்டனில் உள்ள சுமார் 3800 பணியாளர்கள் பாதிக்கப்பட உள்ளனர். குறிப்பாக, ஜெர்மனியில் 2300 பேரும், பிரிட்டனில் […]

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு, தனது ஐரோப்பா பிரிவில் இருந்து 11% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. வாகனத் துறையை பொறுத்தவரை, பாரம்பரிய முறையில் இருந்து மின்சார வாகன முறைக்கு உலகம் மாறி வருவதால் இந்த பணி நீக்கம் அவசியமாகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனம் அறிவித்துள்ள இந்த பணி நீக்கத்தால், ஜெர்மனி மற்றும் பிரிட்டனில் உள்ள சுமார் 3800 பணியாளர்கள் பாதிக்கப்பட உள்ளனர். குறிப்பாக, ஜெர்மனியில் 2300 பேரும், பிரிட்டனில் 1300 பேரும் பாதிப்படையலாம் என்று கருதப்படுகிறது. மேலும், இந்த பணி நீக்கம், அடுத்த 3 வருடங்களில் பல கட்டங்களாக நிகழும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய ஃபோர்டு மின்சார வாகன வர்த்தகப் பிரிவின் பொது மேலாளர் மாட்டின் சான்டர், "மின்சார வாகனங்கள் துறையை நோக்கி நகர்வது அவ்வளவு கடினமானதாக இல்லை. ஃபோர்டு நிறுவனம் இந்த துறையில் முன்னேறி வருகிறது" என்று கூறினார். மேலும், இந்த பணி நீக்க நடவடிக்கையால் ஃபோர்டு நிறுவனத்திற்கு 4 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை செலவாகும் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu