கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாத காலகட்டத்தில், இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக மதிப்பு 80000 கோடி டாலரை கடந்துள்ளது. குளோபல் ட்ரேட் ரிசர்ச் இனிஷியேடிவ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த அறிக்கையின் படி, இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதி முந்தைய ஆண்டை விட 1.5% உயர்ந்து, 38540 டாலர்களாக உள்ளது. அதே வேளையில், இறக்குமதி மதிப்பு முந்தைய ஆண்டை விட 5.9% குறைந்து, 41550 கோடி டாலர்களாக உள்ளது. எனவே, இந்தியாவின் மொத்த அந்நிய வர்த்தக மதிப்பு 80090 டாலர்களாக உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 2.5% குறைவாகும். எனினும், பெரும்பான்மையாக, நேர்மறை ஏற்றுமதி வளர்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைவாரியாக சரக்கு ஏற்றுமதி 8.1% குறைவாகவும், சேவை ஏற்றுமதி 17.7% உயர்வாகவும் பதிவாகியுள்ளது. அதே வேளையில், சரக்கு இறக்குமதி 8.3% குறைவாகவும், சேவை இறக்குமதி 3.7% உயர்வாகவும் பதிவாகியுள்ளது.














