வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கு - இம்ரான்கானுக்கு ஜாமின் வழங்கியது லாகூர் நீதிமன்றம்

February 21, 2023

இம்ரான்கான் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி தாரிக் சலீம் ஷேக், இம்ரான் கானுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான், பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அடுத்து பதவி விலகினார். தனது ஆட்சிக்காலத்தில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றது தொடர்பாக பெடரல் ஏஜென்சி நடத்திய விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கி வெளிநாட்டு நிதி பெற்றது தெரியவந்தது. இந்த வழக்கில் தேர்தல் […]

இம்ரான்கான் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி தாரிக் சலீம் ஷேக், இம்ரான் கானுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான், பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அடுத்து பதவி விலகினார். தனது ஆட்சிக்காலத்தில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றது தொடர்பாக பெடரல் ஏஜென்சி நடத்திய விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் துவங்கி வெளிநாட்டு நிதி பெற்றது தெரியவந்தது.

இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து தேர்தல் ஆணைய அலுவலகம் முன் இம்ரான் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கில் இம்ரான் கான் மீது வழக்குப்பதியப்பட்டு எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாயின. ஜாமின் கோரி லாகூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று லாகூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். இம்ரான்கான் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி தாரிக் சலீம் ஷேக், இம்ரான் கானுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu