பெருந்தொற்று காலத்திற்கு பின் வெளிநாட்டினர் வருகை 4 மடங்கு உயர்வு

February 8, 2023

கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில், சுற்றுலாத்துறை மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பெருந்தொற்று காலம் நிறைவடைந்து, சகஜ நிலை திரும்பி உள்ளதால், சுற்றுலாத்துறை மீண்டும் மேம்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2022 ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளதாக மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட 6.9 வெளிநாட்டினர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளதாக அவர் கூறினார். குஜராத்தில் ஜி-20 மாநாட்டுக்கான […]

கொரோனா பெருந்தொற்று ஏற்பட்ட காலத்தில், சுற்றுலாத்துறை மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பெருந்தொற்று காலம் நிறைவடைந்து, சகஜ நிலை திரும்பி உள்ளதால், சுற்றுலாத்துறை மீண்டும் மேம்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2022 ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்துள்ளதாக மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட 6.9 வெளிநாட்டினர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளதாக அவர் கூறினார். குஜராத்தில் ஜி-20 மாநாட்டுக்கான பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த தகவலை அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “சுற்றுலா துறையை டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே வேளையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் முயற்சிகள் சரியான திசையில் முன்னேறி வருவதாக நம்புகிறோம்” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu