ஆப்பிள் இறக்குமதிக்கு தடை - இறக்குமதி விதிகளில் புதிய மாற்றங்கள்

இந்தியா, நேற்று ஆப்பிள் பழ இறக்குமதியை தடை செய்வதாக அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களில், கிலோகிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் - பழத்தின் விலை, காப்பீடு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்காக மதிப்பிடப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ ஆப்பிளின் இறக்குமதி விலை 50 ரூபாய்க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில், இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவுக்கு மிகவும் அருகில் இருக்கும் பூட்டானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இயக்குனரகம் தெரிவித்துள்ளது. கடந்த […]

இந்தியா, நேற்று ஆப்பிள் பழ இறக்குமதியை தடை செய்வதாக அறிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களில், கிலோகிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் - பழத்தின் விலை, காப்பீடு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றிற்காக மதிப்பிடப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ ஆப்பிளின் இறக்குமதி விலை 50 ரூபாய்க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில், இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவுக்கு மிகவும் அருகில் இருக்கும் பூட்டானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாக வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் ஆப்பிள் இறக்குமதி, துருக்கி, இத்தாலி, ஈரான், சிலி ஆகிய நாடுகளில் இருந்து செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 260.37 மில்லியன் டாலர்களுக்கு ஆப்பிள் இறக்குமதி மேற்கொள்ளப்பட்டது. அதே வேளையில், ஈரான் ஆப்பிளின் வரவால், காஷ்மீர் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது. தற்போது, ஆப்பிள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக, உள்நாட்டு ஆப்பிள் விவசாயிகள் பயனடைவர் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu