மத்திய அரசின் புதிய 'ஒரே நாடு ஒரே சந்தா' திட்டம், வரும் ஜனவரி மாதத்தில் செயல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் இந்த திட்டம் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
'ஒரே நாடு ஒரே சந்தா' திட்டத்தின் மூலம் 13,000-க்கும் மேற்பட்ட சர்வதேச ஆராய்ச்சி இதழ்களை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இலவசமாக படிக்க முடியும். இதற்காக மத்திய அரசு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் திட்டம் குறித்து உலகெங்கிலும் உள்ள பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்தியாவின் இந்த முயற்சி, நாட்டின் அறிவியல் ஆராய்ச்சித் துறையை உலகளாவிய அளவில் முன்னணிக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.