எகிப்து - பழமையான பெண் மம்மியின் முக அமைப்பு வெளியீடு

November 15, 2022

எகிப்து நாட்டின் பிரமிடுகளில் பழமையான பல மம்மிக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள், ‘மர்மப் பெண்’ என்று பெயரிடப்பட்டுள்ள மம்மியின் முக அமைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பெண் இறக்கும் பொழுது 7 மாதங்கள் கர்ப்பமாக இருந்துள்ளார். அவரது உடல் உள் உறுப்புகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, சிசு மட்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டு, அவரது உடல் பதப்படுத்தப்பட்டுள்ளது. எகிப்தியர்களின் புராண கால நம்பிக்கை படி இவ்வாறு செய்யப்பட்டு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். விஞ்ஞான முறைப்படி அவரது முகத்தோற்றம் எவ்வாறு […]

எகிப்து நாட்டின் பிரமிடுகளில் பழமையான பல மம்மிக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள், ‘மர்மப் பெண்’ என்று பெயரிடப்பட்டுள்ள மம்மியின் முக அமைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பெண் இறக்கும் பொழுது 7 மாதங்கள் கர்ப்பமாக இருந்துள்ளார். அவரது உடல் உள் உறுப்புகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, சிசு மட்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டு, அவரது உடல் பதப்படுத்தப்பட்டுள்ளது. எகிப்தியர்களின் புராண கால நம்பிக்கை படி இவ்வாறு செய்யப்பட்டு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். விஞ்ஞான முறைப்படி அவரது முகத்தோற்றம் எவ்வாறு இருந்திருக்கும் என்று வார்சா மம்மி திட்டத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அந்த மர்மப் பெண் மம்மியின் இரு பரிமாணம் மற்றும் முப்பரிமாண தோற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பெண் இறக்கும் போது 20 வயதுகளில் இருந்திருக்கலாம் என்றும், புற்றுநோய் காரணமாக இறக்க நேர்ந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu