சதுரகிரி மலைப்பகுதியில் காட்டுத்தீ பரவல் – கோவில் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தம்

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பாதையில் காட்டுத்தீ பரவியதால், பக்தர்களின் தரிசனம் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த வாரம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு தரிசனம் செய்தனர். இதற்கிடையில் ஜூலை 25ஆம் தேதி காட்டுத்தீ பரவியதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் சாப்டூர் வனச்சரகம் வருசநாடு வழியாக செல்லும் பாதையிலும் தீ ஏற்பட்டு மரங்கள் எரிந்தன. காற்றின் வேகம் காரணமாக தீ பரவியதால் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டன. வனத்துறையினர் […]

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பாதையில் காட்டுத்தீ பரவியதால், பக்தர்களின் தரிசனம் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த வாரம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு தரிசனம் செய்தனர். இதற்கிடையில் ஜூலை 25ஆம் தேதி காட்டுத்தீ பரவியதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் சாப்டூர் வனச்சரகம் வருசநாடு வழியாக செல்லும் பாதையிலும் தீ ஏற்பட்டு மரங்கள் எரிந்தன. காற்றின் வேகம் காரணமாக தீ பரவியதால் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டன. வனத்துறையினர் மற்றும் 10க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்க முயன்றும், வறண்ட சூழ்நிலை காரணமாக கட்டுப்படுத்த சிரமம் ஏற்பட்டது. 2வது நாளாக மணிக்கட்டி பகுதியில் தீ பரவுவதால், பக்தர்களுக்கு கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் அடிவாரத்தில் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu