கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரசின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
தொண்டைப் புற்றுநோய் பாதிப்பின் காரணமாக உம்மன் சாண்டி ஜெர்மனியில் சிறிது காலம் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் இவரது மேல் சிகிச்சைக்காக பெங்களூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த உம்மன் சாண்டி உடல்நல குறைவால் நேற்று காலமானார்.
இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருள் ஒருவராவார். காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். மேலும் கடந்த 1970 முதல் கோட்டையம் மாவட்டம், புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 52 வருடங்களுக்கு மேலாக எம்.எல்.ஏ. ஆக இருந்தார்.
2004 - 2006 ஆண்டுகளில் கேரளாவில் முதல் மந்திரியாக உம்மன் சாண்டி பதவி வகித்துள்ளார். மேலும் ஐந்து ஆண்டுகள் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றினார்.பின்னர் மீண்டும் 2011 - 2016 இல் முதல் மந்திரி ஆக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது மறைவிற்கு நாட்டின் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்த வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.