டெல்லி முன்னாள் மந்திரி ராஜ்குமார் தகுதி நீக்கம்

டெல்லி முன்னாள் மந்திரி ராஜ்குமார் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி ராஜ்குமார் ஆனந்த் அவரது மந்திரி பதவியை ராஜினாமா செய்து ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினார். பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். இதனால் கட்சி அவரின் மீது தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகர் இடம் கோரிக்கை வைத்தது. அதன்படி அவருக்கு ஜூன் 10ஆம் தேதி விளக்கம் […]

டெல்லி முன்னாள் மந்திரி ராஜ்குமார் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி ராஜ்குமார் ஆனந்த் அவரது மந்திரி பதவியை ராஜினாமா செய்து ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினார். பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். இதனால் கட்சி அவரின் மீது தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகர் இடம் கோரிக்கை வைத்தது. அதன்படி அவருக்கு ஜூன் 10ஆம் தேதி விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அதற்கு அவர் பதில் அளிக்காத நிலையில் நேரில் ஆஜராகும் படி கேட்டுக் கொள்ளப்பட்ட போதும் அவர் ஆஜராகவில்லை. அதனைத் தொடர்ந்து ஜூன் 14ஆம் தேதி ஆஜராக வேண்டும் என இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டதிலும் அவர் ஆஜராகவில்லை. இதனால் அவருடைய சட்டமன்ற உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் தெரிவித்துள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu