தமிழகத்தில், கடந்த 6 மாதங்களாக மாநில தலைமை தகவல் ஆணையர் பதவி காலியாக இருந்து வந்தது. இதன் பொருட்டு, பல்வேறு தரப்புகளில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இந்த பதவிக்கு முன்னாள் டிஜிபி ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அவரை நியமித்துள்ளார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த ஷகீல் அக்தர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆவார். அவர், ஏற்கனவே தமிழகத்தின் டிஜிபியாக பணியாற்றியுள்ளதால், அவரது நியமனம் ஏற்புடையதாக சொல்லப்படுகிறது. அவர் அடுத்த 3 ஆண்டுகள் அல்லது அவரது 65 வயது வரை இந்த பணியில் இருப்பார் என சொல்லப்பட்டுள்ளது. தலைமை ஆணையர் பதவியில் ஷகீல் அக்தர் நியமிக்கப்பட்டுள்ள அதே வேளையில், மாநில தகவல் ஆணையர்களாக ஓய்வு பெற்ற ஏடிஜிபி தாமரைக் கண்ணன், பேராசிரியர் டாக்டர் எம் செல்வராஜ் மற்றும் வழக்கறிஞர் பிரியகுமார் டாக்டர் திருமலை முத்து ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.