இந்திய ஏஜென்சிகள் மூலம், முறைகேடான ஆவணங்களை கொண்டு கனடாவில் புகுந்துள்ளதாக, இந்திய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர்கள், கனடாவின் இந்த குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆதரவாக, காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரேட்டர் டொரன்டோ பகுதியில் இந்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. “முறைகேடுகளில் மாணவர்களுக்கு சம்பந்தமில்லை. அது ஏஜென்சியின் குற்றமாகும். எனவே, இது தொடர்பாக மாணவர்கள் வெளியேற்றப்படுவதை நிறுத்தும் வரையில் போராட்டம் தொடரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மாணவர்கள் பலர், Mississauga விமான நிலைய சாலையில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் 2017 முதல் 2019 க்குள் கனடாவுக்கு படிக்க சென்றவர்கள் ஆவர். இந்தப் போராட்டத்தால் கனடாவில் பரபரப்பு நிலவுகிறது.














