பணமோசடி வழக்கில் என் எஸ் இ -ன் முன்னாள் தலைவர் ரவி நரேன் கைது

September 8, 2022

இந்திய தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ரவி நரேன் என்பவரை, சட்ட விரோதமாக ஊழியர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்குதல் மற்றும் பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் கைது செய்துள்ளது. நரேன் 1994 முதல் 2013 வரை என் எஸ் இ (NSE) இன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். பின்னர் 2013 மற்றும் 2016 க்கு இடையில் சித்ரா ராமகிருஷ்ணன் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார். அச்சமயம் என் எஸ் இ சைபர் பாதிப்புகள் […]

இந்திய தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ரவி நரேன் என்பவரை, சட்ட விரோதமாக ஊழியர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்குதல் மற்றும் பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் கைது செய்துள்ளது.

நரேன் 1994 முதல் 2013 வரை என் எஸ் இ (NSE) இன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். பின்னர்
2013 மற்றும் 2016 க்கு இடையில் சித்ரா ராமகிருஷ்ணன் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார்.
அச்சமயம் என் எஸ் இ சைபர் பாதிப்புகள் குறித்து ஆய்வு செயவதாகக் ௯றி ஊழியர்களின் தொலைபேசி அழைப்புகளை சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்க இ௫வ௫ம் போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டேயுடன் இணைந்து iSEC சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து பணிபுரிந்தனர். பின்னர் அவ்வழக்கு தொடர்பாக மூவரும் மத்திய புலனாய்வு அமைப்பால் (சிபிஐ) கைது செய்யப்பட்டனர். தற்போது
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், முன்னாள் என்எஸ்இ தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே ஆகியோர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu