மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலுங்கானா முன்னாள் மந்திரியின் மகளும் பிஆர்எஸ் கட்சியின் எம்.எல்.சி ஆன கவிதா அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இதில் 100 கோடி வரை ஏமாற்றி உள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா கைதாகினார். மேலும் தெலுங்கானா முதல் மந்திரியும் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவர் ஆன சந்திரசேகர ராவ் மகள் கவிதா மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கவிதா நேற்று அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.