இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியுறவு துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அமைச்சரவையில் மாற்றம் செய்துள்ளார் பிரதமர் ரிஷி சுனக். இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் வெளியுறவு துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 2010 முதல் 2016 வரை இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்தார். நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சரவையில் உயர் பதவி ஏற்பது என்பது அரிதானது. இவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லாத மேலவையின் உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.
வெளியுறவு துறை அமைச்சராக இருந்த ஜேம்ஸ் கிளைவரி இங்கிலாந்தின் புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பதவி நீக்கம் செய்யப்பட்ட சுவில்லா பிரேவர்மேனுக்கு பதிலாக உள்துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார். பாலஸ்தீன ஆதரவு பேரணிகளை கையாண்ட விதம் குறித்து அரசை விமர்சனம் செய்ததால் பிரேவர்மேனை பதவி நீக்கினார் பிரதமர் ரிஷி சுனக்.