ஃபோர்டிஸ் (Fortis) நிறுவனம், இந்த பெயரில் பல்வேறு மருத்துவமனைகளை இயக்கி வருகிறது. தற்போது, அதன் பெயரை, பார்க்வே (Parkway) என்று மாற்ற உள்ளது. நிறுவனத்தின் தலைவர் ரவி ராஜகோபால் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஃபோர்டிஸ் நிறுவனத்தின் பெயரை, சட்டபூர்வமாக பார்க்வே என்று மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்” என்று கூறினார். பார்க்வே என்பது மலேசியாவைச் சேர்ந்த சுகாதார நிறுவனமான ஐஎச்எச் (IHH) நிறுவனத்தை சேர்ந்ததாகும். ஃபோர்டிஸ் நிறுவனத்தின் 31.1% பங்குகள், தற்போது, பார்க்வே வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.














