சீனாவில் 190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இறந்த டைனோசர் புதை படிவம் கண்டுபிடிப்பு

November 22, 2023

சீனாவில் புதிய வகை டைனோசர் இனத்தின் புதை படிவங்கள் கிடைத்துள்ளன. இந்த வகை டைனோசர்கள் 190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. புதை படிவங்கள் மட்டுமின்றி பொறிக்கப்படாத டைனோசர் முட்டைகளும் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விரிவான அறிக்கை நேச்சர் சயின்ஸ் ரிவ்யூ ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள Guizhou மாகாணத்தில், புதிய வகை டைனோசர் இனத்தின் புதை படிவங்கள் கிடைத்துள்ளன. இந்த வகை டைனோசர்களுக்கு Qianlong shouhu என பெயரிடப்பட்டுள்ளது. […]

சீனாவில் புதிய வகை டைனோசர் இனத்தின் புதை படிவங்கள் கிடைத்துள்ளன. இந்த வகை டைனோசர்கள் 190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. புதை படிவங்கள் மட்டுமின்றி பொறிக்கப்படாத டைனோசர் முட்டைகளும் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விரிவான அறிக்கை நேச்சர் சயின்ஸ் ரிவ்யூ ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள Guizhou மாகாணத்தில், புதிய வகை டைனோசர் இனத்தின் புதை படிவங்கள் கிடைத்துள்ளன. இந்த வகை டைனோசர்களுக்கு Qianlong shouhu என பெயரிடப்பட்டுள்ளது. இவை sauropodomorphs டைனோசர் இனத்தின் வழித்தோன்றல்களாக கருதப்படுகின்றன. நீண்ட கழுத்து, நீண்ட வால், சிறிய தலை, உறுதியான கால்கள் போன்றவற்றை கொண்டதாக இது அறியப்படுகிறது. இவை 20 அடி உயரமாகவும், ஒரு டன் எடையுள்ளதாகவும் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இங்கு கிடைத்துள்ள டைனோசர் முட்டைகள், சிறியதாகவும் கோள வடிவிலும் உள்ளன. அத்துடன், இவை கடினமான வெளிப்புற பாகத்தை கொண்டிருக்காமல், லெதர் போன்ற அமைப்பை கொண்டுள்ளன. இது மிக முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. இவற்றின் மூலம், விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu