தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையில் கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழையால் கிழக்கு கடலோர பகுதிகளில் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 2,30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் பலர் பாதுகாப்பான இடங்களில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளத்தினால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 குழந்தைகளும் உள்ளனர். சிலர் வெள்ளத்தில் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, இலங்கையில் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.