இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்கள் உலக சிறந்த கல்வி நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றன

மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்கள், உலகின் சிறந்த கல்வி வாய்ப்புகள் உள்ள இடங்களாக தேர்வாகியுள்ளன. மாணவர் மதிப்பீடு மற்றும் பல்கலை தரத்தின் அடிப்படையில் இந்த முன்னேற்றம் பதிவாகியுள்ளது. லண்டன் தலைமையிலுள்ள 'QS' நிறுவனத்தின் வருடாந்த சிறந்த கல்வி நகரங்கள் பட்டியலில், இந்தியாவின் நான்கு நகரங்கள் — மும்பை (98), டெல்லி (104), பெங்களூரு (108), சென்னை (128) ஆகியவை இடம்பிடித்துள்ளன. முந்தைய ஆண்டைவிட அனைத்தும் பல இடங்கள் முன்னேறி உள்ளன. உலக அளவில் 150 […]

மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்கள், உலகின் சிறந்த கல்வி வாய்ப்புகள் உள்ள இடங்களாக தேர்வாகியுள்ளன. மாணவர் மதிப்பீடு மற்றும் பல்கலை தரத்தின் அடிப்படையில் இந்த முன்னேற்றம் பதிவாகியுள்ளது.

லண்டன் தலைமையிலுள்ள 'QS' நிறுவனத்தின் வருடாந்த சிறந்த கல்வி நகரங்கள் பட்டியலில், இந்தியாவின் நான்கு நகரங்கள் — மும்பை (98), டெல்லி (104), பெங்களூரு (108), சென்னை (128) ஆகியவை இடம்பிடித்துள்ளன. முந்தைய ஆண்டைவிட அனைத்தும் பல இடங்கள் முன்னேறி உள்ளன. உலக அளவில் 150 நகரங்கள் மதிப்பீட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 1 லட்சம் மாணவர்களிடமிருந்து கருத்து பெறப்பட்டது. மக்கள் தொகை, பல்கலைக்கழக தரம், மாணவர் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை அமைக்கப்பட்டது. 6 ஆண்டுகள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த லண்டன், இப்போது மூன்றாவது இடத்திற்கு நகர்ந்துள்ள நிலையில், தென்கொரியாவின் சியோல் நகரம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu