வேதாந்தா கூட்டணியில் இருந்து விலகல் - பாக்ஸ்கான், எஸ்டி மைக்ரோ நிறுவனத்துடன் கூட்டணி

September 8, 2023

தைவானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம், இந்தியாவின் வேதாந்தா நிறுவனத்துடன் இணைந்து சிப் தயாரிப்பில் ஈடுபடுவதாக இருந்தது. ஆனால், இந்த கூட்டணியில் இருந்து பாக்ஸ்கான் நிறுவனம் விலகியது. தற்போது, செமி கண்டக்டர் சிப் தயாரிப்பை முன்னிறுத்தி, எஸ்டி மைக்ரோ நிறுவனத்துடன் பாக்ஸ்கான் கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த நிறுவனங்களின் கூட்டணியில், இந்தியாவில் புதிய செமி கண்டக்டர் ஆலை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 40 நானோ மீட்டர் சிப் தயாரிப்பை முன்னிறுத்தி பாக்ஸ்கான் மற்றும் எஸ்டி மைக்ரோ நிறுவனங்கள் இணைந்துள்ளன. […]

தைவானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம், இந்தியாவின் வேதாந்தா நிறுவனத்துடன் இணைந்து சிப் தயாரிப்பில் ஈடுபடுவதாக இருந்தது. ஆனால், இந்த கூட்டணியில் இருந்து பாக்ஸ்கான் நிறுவனம் விலகியது. தற்போது, செமி கண்டக்டர் சிப் தயாரிப்பை முன்னிறுத்தி, எஸ்டி மைக்ரோ நிறுவனத்துடன் பாக்ஸ்கான் கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த நிறுவனங்களின் கூட்டணியில், இந்தியாவில் புதிய செமி கண்டக்டர் ஆலை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

40 நானோ மீட்டர் சிப் தயாரிப்பை முன்னிறுத்தி பாக்ஸ்கான் மற்றும் எஸ்டி மைக்ரோ நிறுவனங்கள் இணைந்துள்ளன. இதற்காக, குஜராத்தில் 1.5 லட்சம் கோடி டாலர் முதலீட்டில் சிப் தயாரிப்பு ஆலை அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கார்கள், கேமராக்கள், பிரிண்டர்கள் மற்றும் இதர மின்னணு சாதனங்களில், மிக முக்கியமான உபகரணமாக, 40 நானோ மீட்டர் சிப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, பாக்ஸ்கான் நிறுவனம், இந்தியாவின் ஐபோன் தயாரிப்பில் மிக முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது. இந்த நிலையில், சிப் தயாரிப்பிலும் பாக்ஸ்கான் மிகப்பெரிய பங்களிப்பை வழங்க உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu