ப்ளூம்பர்க் அறிக்கையின் படி, 100 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பை எட்டிய முதல் பெண்ணாக பிராங்கோயிஸ் மேயர் அறியப்படுகிறார். இதுவரை ஆண்கள் மட்டுமே அங்கம் வகித்து வந்த பில்லியனர் குழுவில், முதல் பெண் இணைந்துள்ளார். நேற்றைய தினம் அவரது சொத்து மதிப்பு 99.9 பில்லியன் டாலர்கள் ஆக இருந்தது.
லோரியல் அழகு சாதனப் பொருட்கள் நிறுவனத்தின் வாரிசு பிராங்கோயிஸ் மேயர் ஆவார். லோரியல் நிறுவனத்தின் கிளை நிறுவனங்களாக, மேபிலைன், கேல்ஸ், என் ஒய் எக்ஸ் போன்ற அழகு சாதன நிறுவனங்கள் உள்ளன. இவரது குடும்பம் லோரியல் நிறுவனத்தின் 35% பங்குகளை வைத்துள்ளது. விரைவில், உலகப் பணக்காரர்கள் பட்டியலில், வாரன் பஃபெட், மார்க் ஜூக்கர்பெர்க், ஜெஃப் பெசோஸ் ஆகியோருக்கு அருகில் இவர் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, 70 வயதாகும் மேயர் ஒரு எழுத்தாளரும் கூட.