ஜெலன்ஸ்கி-டிரம்ப் வாக்குவாதம் – ராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்தியது
2022 பிப்ரவரியில் தொடங்கிய ரஷியா-உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியால் இழந்த பகுதிகளை மீட்டுள்ளது. சமீபத்தில், அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வந்த ராணுவ புலனாய்வு உதவியை திடீரென நிறுத்தியது. இது ரஷியாவின் ராணுவ நகர்வுகளை கண்காணிக்க உதவியது. இதற்கிடையே, அமெரிக்கா-உக்ரைன் இடையேயான அரிய கனிமங்கள் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் போனது.
இந்த சூழலில், அமெரிக்கா வழங்கி வந்த உதவியை நிரப்பும் வகையில் பிரான்ஸ் உதவிக்கரம் நீட்டியுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் செபஸ்டியன் லெகோர்னு, "எங்களின் புலனாய்வு ஆதரவை உக்ரைனுக்கு வழங்கி உதவுவோம்" என்று தெரிவித்துள்ளார். அதிபர் இமானுவேல் மேக்ரான், உக்ரைனுக்கு உதவிகளை விரைவுபடுத்தும் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அமெரிக்காவின் முடிவால் போலந்தில் இருந்து உக்ரைனுக்கு செல்லவிருந்த ராணுவ உதவிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மூன்று வருடங்களாக போரில் தன்னை பாதுகாத்துக்கொள்வது, தேவையான பொருட்களை சேமித்து வைப்பது குறித்து உக்ரைன் மக்கள் பழகிக் கொண்டுள்ளனர் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.