பிரண்ட்ஸ் நாட்டில் அரசு நடத்தும் பள்ளிகளில் இஸ்லாமிய உடையான அபாயா தடை செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் அரசு நடத்தும் பள்ளிகளில் இஸ்லாமிய பெண்கள் அணியும் அபாயா எனப்படும் ஆடை தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரான்சில் கல்விக் கொள்கைகளில் ஏற்பட்ட சில மாறுதல்களுக்கு பிறகு பள்ளிகளில் மத அடையாளங்களுக்கு கடுமையான தடையை அரசு விதித்தது. இதன் காரணமாக முஸ்லிம் சிறுபான்மையினருக்கான புதிய வழிகாட்டுதல்கள் புதுப்பிக்கப்பட்டது. அதனையடுத்து 2004 ஆம் ஆண்டு பள்ளிகளில் முக்காடு அணிவதை பிரான்ஸ் அரசு தடை செய்தது. அதேபோன்று 2010 ஆம் ஆண்டு பொது இடங்களில் முகத்தை மூடுவதற்கும் தடை விதித்தது.
இந்த உத்தரவுகள் அங்கு வசித்து வரும் இஸ்லாமிய சமூகத்தினரை கோபமடைய செய்தது. இந்நிலையில், பள்ளிகளில் இனி அபாயா எனப்படும் இஸ்லாமிய உடை அணியக்கூடாது என்று கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டல் கூறினார். மேலும் அவர் கூறுகையில் வகுப்பறைக்குள் மாணவர்களின் மதத்தை அவர்களைப் பார்த்து அடையாளம் காண முடியாது என்றார்.