பிரான்ஸ் அரசியலமைப்பு சட்டத்தில் கருக்கலைப்பை பெண்களின் உரிமையாக ஏற்றுக்கொள்ளும் சட்ட முன்வரைவு நேற்று நாடாளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கருக்கலைப்பு உரிமைகள் திரும்ப பெறப்பட்டதை அடுத்து இதை அரசியலமைப்பு சட்டத்தில் இடம்பெற செய்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேகிரான் கூறியிருந்தார். அரசியலமைப்பு சட்டத்தில் 34 ஆவது பிரிவில் பெண்களுக்கான கருக்கலைப்பு உரிமையை இடம்பெறும் வகையில் சட்டத்தை திருத்த வேண்டும் என்று மேக்ரான அரசு எண்ணுகிறது. இந்த திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனி சிறப்பு அமர்விலும் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கு ஆதரவாக தேசிய அவை வாக்களிக்கும். பிரான்ஸின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கின்றனர். ஆகையால் திருத்தம் எளிதில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.