ஒலிம்பிக் விழா நடைபெறும் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ரயில் பாதைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த விழாவை காண ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ரயில் பாதைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அட்லாண்டிக் வழிதடத்தில் பிரான்சின் மேற்கு மற்றும் தென்மேற்கு நகரங்களையும் பாரிசையும் இணைக்கும் அதிவிரைவு ரயில் செல்லும் பாதையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தண்டவாளம் அருகே அமைக்கப்பட்டுள்ள கேபில் ஒயர்கள் தீ வைத்த எரிக்கப்பட்டுள்ளன. இதனால் அதிவிரைவு ரயில் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரான்ஸ் - இங்கிலாந்து இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்கள் மீதான தாக்குதலால் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.














