கேப்ரியல் அட்டல் பிரான்ஸின் இளைய பிரதமரானாா்

January 10, 2024

பிரான்ஸ் நாட்டு கல்வித்துறை அமைச்சர் கேப்ரியல் அட்டலை பிரதமராக நியமித்துள்ளார் அதிபர் இமானுவேல் மெக்ரான். பிரான்சில் தீவிர வலதுசாரி இயக்கங்களுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. அதற்கு ஏற்ப அரசின் கொள்கைகளை மெக்ரான் மாற்றி வருகிறார். அதன் ஒரு பகுதியாக கல்வித்துறை அமைச்சர் கேப்ரியல் அட்டலை பிரதமராக நியமித்துள்ளார். கேப்ரியல் வலதுசாரி கொள்கைகளை புகுத்தி வந்தார். அவர் ஏற்கனவே அரசியல் செய்தி தொடர்பாளராக பொறுப்பு வகித்துள்ளார். இவர் தன்னை நேர் பாலின சேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார் […]

பிரான்ஸ் நாட்டு கல்வித்துறை அமைச்சர் கேப்ரியல் அட்டலை பிரதமராக நியமித்துள்ளார் அதிபர் இமானுவேல் மெக்ரான்.

பிரான்சில் தீவிர வலதுசாரி இயக்கங்களுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது. அதற்கு ஏற்ப அரசின் கொள்கைகளை மெக்ரான் மாற்றி வருகிறார். அதன் ஒரு பகுதியாக கல்வித்துறை அமைச்சர் கேப்ரியல் அட்டலை பிரதமராக நியமித்துள்ளார். கேப்ரியல் வலதுசாரி கொள்கைகளை புகுத்தி வந்தார். அவர் ஏற்கனவே அரசியல் செய்தி தொடர்பாளராக பொறுப்பு வகித்துள்ளார். இவர் தன்னை நேர் பாலின சேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வயது 34. பிரான்ஸ் நாட்டின் முதல் இளம் பிரதமராக இவர் உள்ளார்.

கேப்ரியல் மக்களிடையே நன்கு அறிமுகமானவராக உள்ளார். அடுத்த தேர்தலில் கட்சியை வெற்றி பெறச் செய்ய இமானுவேல் இந்த உத்தியை கையாண்டதாக கூறப்படுகிறது. இவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் இருப்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu